துரியோதனன் கட்டளையிட்ட
துச்சாதனனா நீ..
என் துகிலுரிக்க
ஏன் துரிது நிற்கிறாய்?
துரௌபதி நிலையில்
துவண்டு நிற்கும் என்னை
வாசுதேவ கிருஷ்ணனாக
காக்க முற்படுகின்றன எம் கரங்கள்!!
ஒரு சில மணித்துளிகளில்
மகாபாரதத்தை
நினைவுபடுத்தி சென்றுவிட்டது
இந்த ஆடி மாத காற்று..!!