ஃ

ஓரணுவை உயிரணுவாக்கி
வாழ்வை வசந்தங்களாக்கி
நின் கையை மென்மையாக்கி
நிதம் எந்தன் சுமைதாங்கியாகி
சுயசரிதை எழுத மை ஊற்றுகையில் உம்மை
காவிய நாயகன் என நினைத்தேன்
பிடியில் இருந்த கோலென
பிடித்திருந்த கரமென
வெண்மை தாளென
வண்ண வரிகளென
நாவலின் நாற்புறமும் நிறைந்த நாயகரே
என் அசைவின் அஸ்திவாரம் நீர்தானே
கண்ணோடு மறைந்து என்னோடு வசிக்கும்
வானவில் நீர்தானே
அம்மா உடைய கூடாதென மறைவில் கரைகின்றேன்
கடவுளானது தெரியாமல் தலைவரைத் தேடி
வாயிலில் காலணி அன்றார்ந்து பார்க்க
வாய்மூடி அழுகின்றேன்
அன்பைக்கூட்டி பண்பை தந்து
கனவைத் திரட்டி காவியம் தந்து
பண்பாடு நான் பெற பெரும்பாடு நீ பெற்று
பணத்தை தாண்டியது பாசமென உணர்த்தி
உணர்வுகளை மறைத்து மறைத்து
மறைந்து போனாயே
இழப்பை ஈடுகட்ட இணையேதுமில்லை அப்பா!!!

Link to our ebook –