மிளிரும் அன்பை
பொன்னாக்கி..
அசையா நம்பிக்கையை
வளையமாக்கி..
எண்ணற்ற இன்னல்களை
வயிரமாய் தாங்கி..
ஈடில்லா கணையாழியாக
காதல் மினுமினுக்க..
கோகினூர் வைரத்தை
ரத்தினமாய் பதித்தாற்போல்
முத்திரையிட்ட
நம் உறவை நாம் சூட …
மெருகூட்டும் விரகதாபங்கள்
வாழும் நாட்கள் வரை…!!!

Link to our ebook –