💌பிறந்தநாள் வாழ்த்து….💕👑😎👷

அழியாத நேர்மையும் ஆழ்ந்த கூர்மையும்
ஆட்கொண்ட ஆண்டகையே
ஆகாய கமனம் தெரிந்திருந்தால்
ஆராவமுதனிடம் ஆகமனமாயிருப்பேனோ
வார்த்தைகள் நெய்தால் வாழ்த்து வருமோ
வாசித்துப் போக வருணன் வாசல் வருமோ
காலம் தந்த கடை கருணை கரையேருமோ
காந்தளின் காதல் கடிதம்
கலாநிதி காலடி செல்லுமோ
கசந்த நாட்கள் கலைந்து போகும்
காத்திருக்கும் நாட்கள் நின்னை கலைஞனாக்கும்
சீராமனின் கண்களின் கனவே
சீராக வேண்டுமே நினைவே
விண்ணை முட்டும் மாடங்களில் – புகழ்
உன்னைத் தொட்டு நிற்கவேண்டுகிறேன்
ஆண்டுகள் ஆயிரமாயினும்
ஆருயிரோடு இறுதி யாத்திரை…
அளகால் நெய்த அதிபனுக்கு
அன்பின் அக்கர இலக்கண அணியல்
சகலமும் நிறைந்த சச்சிதானந்தன்
சிரஞ்சீவியாக வாழ்த்துகிறேன்….💐😍

ஆண்டகை – ஆண்களில் சிறந்தவன், ஆகாயகமனம் – காற்றில் நடக்கும் வித்தை, ஆகமனம் – வந்துசேருதல், காந்தள் – கார்த்திகை பூ, அளகு – பெண்மயில், அக்கர இலக்கணம் – எழுத்திலக்கணம்.

Link to our ebook –