அழகிய நாட்கள்

அடர்ந்த மரங்கள்

ஆங்காங்கே கட்டிடங்கள்

அமைதியானவர்களையும்

அடாவடியாக மாற்றிய நாட்கள்…

நடனமாட தெரியாதவர்களையும்

அரங்கேற வைத்த நாட்கள்  …

பட்டினியில் கிடந்தாலும்

பாகுபாடு பார்க்காத நாட்கள் …

குறும்பான கதையையும்

குறும்படம் எடுத்த நாட்கள் …

தெரியாத விளையாட்டையும்

தெரிந்து கொண்ட நாட்கள் …

தேர்வில் துண்டுச்சீட்டு அனுப்பி

நண்பனை தேர்ச்சி பெற வைத்த நாட்கள் …

வகுப்பறையில் வெளியேற்றப்பட்டாலும்

கண்மணியை கண்ணடித்து ரசித்த நாட்கள் …

நண்பனின் காதல் முறிவுக்கு

விருந்துண்டு கொண்டாடிய நாட்கள் …

உசுப்பேற்றி பல காதல் கதைகளை

உருவாக்கிய நாட்கள் …

தம் மொழி பற்று இல்லாதவர்களையும்

பித்து பிடித்து மொழியை  காதலித்த நாட்கள் …

அடித்துப்பிடித்து கிளம்பினாலும்

நண்பனை விட்டு செல்லாத நாட்கள் …

அன்பான நண்பர்கள் ..

அள்ளிக்கொஞ்சும் இளைய தொகுதிகள்….

அரவணைக்கும் மூத்த தொகுதிகள்….

ஆனந்தமான நாட்கள் …

நிகழ்ச்சிகளை தொகுக்க வைத்து

கல்லூரிக்காக விளையாட வைத்து

பல கலைகளை கற்று கொடுத்து

நீங்காத உறவுகளை உருவாக்கி

ஆழமான உணர்வுகள் தந்து

சுறுசுறுப்பாக மாற்றி

வெற்றிகளை சுவைக்க வைத்து

தோல்விகளை  தட்டிக்கொடுத்து

வாழ்வை ரசிக்க வைத்த நாட்கள்…

சொல்லி புரிய வைக்க முடியாத

போதையான நாட்கள் …

ஆண்டுகள் பல  ஆனாலும்

நினைவுகள்  நிமிடத்தில் மலரும்

மரணப்படுக்கையிலும் உந்தன்   உணர்வுகள் நரம்பை உரசும் …