மழலையின் மௌனமே ராகமாய்
மங்கையின் மௌனமே ரகசியமாய்
உண்மையின் மௌனமே உறக்கமாய்
உறக்கத்தில் மௌனமே ஊஞ்சலாய்
அசைவின்றி களிக்கின்றாய் மௌனமே
ஓசையின்றி ஒலிக்கின்றாய் மௌனமே
எண்ணூறு எண்ணமெல்லாம்
கண்ணிரு கண்டதெல்லாம்
நாளொரு திசையெட்டி
நானூறு இசைத்தட்டி
என்னோடு பரிமாறும் மொழியின் கருவி
கண்ணோடு பரிமாறும் மௌன அருவி

தலைமையில் தவறாகும் மௌனமே
தலைகீழாக மாறாது கவனமே
இளமைக்கு இசையாகும் மௌனமே
இன்றியமையாது போகாமல் கவனமே

சாயும் இமையில் பாய்வது நீராகும் மௌனமே
சாயம் கலைக்க தினம் கண்ணீராகும் மௌனமே
மாயம் இல்லையே மௌனமே
காயம் உள்ளயே மௌனமே
வார்த்தையில் ஒழிந்து கொண்டு
இரவின் மௌனத்தை
இரவல் வாங்கி போனாயே இன்னுயிரே

Image Courtesy : Bala Chandar