உனக்கும் எனக்குமான காதல் ரகசியமானது .என் காதலி என்னை விட்டு போன பின்பு உன்னை காதலிக்க தொடங்கினேன் . உலகத்தில் உள்ள எல்லாரையும் வெறுத்து ஒதுக்கினேன்.வாழ்க்கையில் ஒரு பிடிப்பு இல்லாமல் போனது .உன்னை மட்டுமே விரும்பினேன். என் தனிமை சோகம் எல்லாவற்றிலும் நீ மட்டுமே இருந்தாய் .

எவ்வளவு வேலை சுமை இருந்தாலும் உன்னை சந்திக்க மறக்கவில்லை, சிந்திக்கவும் மறக்கவில்லை.

வாழ்க்கை விரைவாக ஓடியது .என் வீட்டாரின் கட்டாயத்தில் எனக்கு திருமணம் நடந்தது .ஆனால் உனக்கும் எனக்குமான அன்பு அதிகரித்து கொண்டு தான் போனது.

மனைவிக்கும் பிள்ளைகளுக்கும் நம் காதல் தெரியாமல் பார்த்து கொண்டேன்.ஆனால் ஒரு நாள் அவர்களுக்கு தெரிய வந்தது. உன்னை விட்டு விலக அவர்கள் மன்றாடி கேட்டுக்கொண்டனர்.உன்னை விட்டு விலக இயலவில்லை .நம் சந்திப்புகள் தொடர்ந்தது…….

உன்னை பற்றி மட்டுமே யோசித்த நான் , என் பிள்ளைகளையும் மனைவியையும் எண்ணி கூட பார்க்கவில்லை .ஆனால் அவர்கள் என்னை மட்டுமே நம்பி இருந்தார்கள் என்பது மரன படுக்கையில் தான் உணர்ந்தேன்.

அவர்கள் என்னை காப்பாற்ற முயன்றார்கள். நீ என்னை சந்திக்க கூட வரவில்லை. நான் மட்டுமே உன்னை ரசித்து காதல் செய்தேன் நீ , என் காதலி  (புகையிலை )என்னை காதலிக்கவில்லை .புகையிலையை ஒரு போதும் காதலிக்காதீர் .

உங்கள் அன்பை உயிர்களிடத்தில் பகிருங்கள் ..!!